ஜமாலியா (சென்னை)
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதிஜமாலியா இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இவ்வூர், இரயில் பெட்டிகள் தயாரிக்கும் பெரம்பூர் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே உள்ளதால், இங்குள்ள மக்களுக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் தொழில் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜமாலியா மேனிலைப் பள்ளிக்கு அருகில் ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை கால்பந்து விளையாட்டு மைதானம் ஆக்க நடவடிக்கை எடுக்க, இவ்வூர் அடங்கிய சட்டமன்றத் தொகுதியான திரு. வி. க. நகர் யின் உறுப்பினராக உள்ள தாயகம் கவி தமிழக சட்டமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருக்கின்ற சிவ. வீ. மெய்யநாதன் திரு. வி. க. நகர் சட்டமன்றத் தொகுதியின் ஜமாலியாவில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முசுலிம் மக்களும் இங்கு அதிகம் வாழ்கின்றனர். இந்துக் கோயில்கள், ஜமாலியா பள்ளிவாசல், கிறித்தவ ஆலயங்கள் என எல்லா மதத்தினரும் வழிபாடு செய்ய வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இங்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதால், அவற்றை ஆய்வு செய்ய, தமிழக அமைச்சர்கள் மற்றும் மாநகர மேயர், அதிகாரிகள் அடங்கிய குழு கண்காணிப்பு மேற்கொண்டது. ஜமாலியாவில் கூக்ஸ் மற்றும் ஸ்டீஃபன்சன் சாலைகள் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் சென்னையின் அதிஉயர கட்டடமான SPR Highliving District Towers, வசிப்பிடங்கள் மற்றும் வணிகங்கள் சார்ந்த கட்டடங்கள் என்றளவிலும், சென்னையின் உயரமான கட்டடங்கள் வரிசையில் முதலிடம் என்றளவிலும் இருக்கும். ஸ்டீஃபன்சன் சாலையிலிருக்கும் 'நார்த் டவுன்' அடுக்கு மாடி குடியிருப்புகள், ஒரு கோயிலையும் உள்ளே கொண்டுள்ளன.



